விடுதி மாணவர்களுடன் குழந்தைகள் தின விழா கொண்டாடிய பெரம்பலூர் எம்.எல்.ஏ.

விடுதி மாணவர்களுடன் குழந்தைகள் தின விழா கொண்டாடிய பெரம்பலூர் எம்.எல்.ஏ.
X

பள்ளி விடுதி மாணவர்களுடன் குழந்தைகள் தினவிழாவை கொண்டாடினார் பிரபாகரன் எம்.எல்.ஏ.

பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ரோவர் பள்ளி விடுதி மாணவர்களுடன் குழந்தைகள் தின விழாவை கொண்டாடினார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் விழா குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ரோவர் பள்ளி விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் குழந்தைகள் தின விழாவை கொண்டாடினார். மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு, பேனா, பென்சில் வழங்கி குழந்தைகள்தினவிழா வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விடுதி காப்பாளர்கள் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!