பெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

எறையூர் அரசு பள்ளி மாணவ  மாணவிகள் மத்தியில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பெரம்பலூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீசார் பள்ளியில் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் மற்றும் கிராம பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலை பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் காவலன் SOS செயலி குறித்தும் குழந்தை திருமணம் குறித்தும் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
the future of ai in healthcare