பிளாஸ்டிக்கை தவிர்த்து முதலமைச்சரின் மஞ்சப்பை திட்டம்:அரசுக்கு விவசாயிகள் நன்றி
பிளாஸ்டிக்கை தவிர்த்து முதலமைச்சரின் மஞ்சப்பை திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலும் மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகள் நிரம்பியதை கொண்டாடும் வகையிலும் பெரம்பலூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மஞ்சப்பையில் வைத்து இனிப்புகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பெரம்பலூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப் பிரியா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கி வரும் கோமாரி நோயின் பாதிப்பினால் 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்து விட்டதாகவும், நோய் பாதிப்பினால் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடாக மாடு ஒன்றுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் ஆடு ஒன்றிற்கு பத்தாயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை கிராமப்புறங்களில் அதிகளவில் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த விவசாயிகள் சமீபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி விரைவில் அதற்
கான நிவாரணத் தொகையை பாரபட்சமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில் சமீபத்தில் பெய்த மழையினால் தற்போது நீர்நிரம்பியதை கொண்டாடும் வகையிலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து முதலமைச்சரின் மஞ்சப்பை திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அனைத்து விவசாயிகளுக்கும் பொதுப்பணித்துறை சார்பில் மஞ்சபையில் வைத்து இனிப்புகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்பிரியா வழங்கினார். இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu