பெரம்பலூர்: மரவள்ளி பயிர்கள் சேதத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட மரவள்ளிகிழங்கு பயிர்களை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக சின்ன வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம் மற்றும் பல்வேறு பயிர்கள் சேதமடைந்துள்ளது. மேலும் தொடர்ந்து மழைநீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலையும் உள்ளது. வேப்பந்தட்டை ஒன்றியம் மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை மற்றும் கோரையாறு பகுதியில் சுமார் 300 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்குகள் பயிரிடப்பட்டுள்ளது. இவை அநேக இடங்களில் அழுகும் நிலையில் உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியிர் ஸ்ரீவெங்கட பிரியா இந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு விரைந்து செய்யப்பட்டு வருகிறது. பயிர் சேதாரம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். தமிழக அரசின் மூலம் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் பெற்று வழங்க சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இந்திரா, வேப்பந்தட்டை வட்டாட்சியர் சரவணன், தோட்டக்கலை உதவி இயக்குநர் விஜயகாண்டீபன், துணை தோட்டக்கலை அலுவலர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu