குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து:பெட்டியில் மனுவைப் போட்டுச் சென்ற பொதுமக்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து:பெட்டியில் மனுவைப் போட்டுச் சென்ற பொதுமக்கள்
X

பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு சென்றனர்.

பொதுமக்கள் மனுக்களை ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

கொரோனோ தொற்று பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள், அமலில் உள்ள நிலையில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (ஜனவரி 10 ) திங்கட்கிழமை யான இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாததால், பொதுமக்கள் மனுக்களை ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதனை அடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் தங்களுக்கு உண்டான கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு சென்றனர்.

Tags

Next Story
ai in future agriculture