பெரம்பலூர் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து 13 பேர் காயம்

பெரம்பலூர் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து 13 பேர் காயம்
X
பெரம்பலூர் அருகே அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெரம்பலூர் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் துறையிலிருந்து பெரம்பலூர் வழியாக தஞ்சாவூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் பிரிவு பாதை அருகே வந்தபோது சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது.

இதில் ஓட்டுனர் உள்பட 13பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story