பெரம்பலூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.21 லட்சம் நகை பணம் கொள்ளை

பெரம்பலூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.21 லட்சம் நகை பணம் கொள்ளை
X
காெள்ளை நடந்த வீட்டில் மாேப்ப நாய் மூலம் போலீசார் விசாரணை மேற்காெண்டனர்.
பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து இருபத்தி ஒரு லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளை போலீசார் விசாரணை.

பெரம்பலூர் நகர் பகுதியில் உள்ள டால்பின் நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இதே ஊரில் ஒரு வீட்டின் துக்க நிகழ்வதற்கு தனது குடும்பத்தினருடன் சென்று நேற்று இரவு அங்கேயே தங்கி இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, கதவின் பூட்டை உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் வைத்திருந்த 7.50 இலட்சம் பணம், 35 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது. மேலும் இதன் பக்கத்து வீட்டில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பெரம்பலூர் அருகே கை. களத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் அவர் வீட்டில் உள்ள 2 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பெரம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கண்ட இரண்டு வீடுகளில் திருடப்பட்ட பணம் மற்றும் நகையின் மதிப்பு சுமார் 21 லட்சம் என கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!