பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து  நகை மற்றும் பணம் திருட்டு
X

கொள்ளை நடந்த வீட்டில் விரல்  ரேகை நிபுணர்கள் சோதனை செய்தனர்.

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மின் நகரில் வசித்து வருபவர் கதிர்வேல். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் தனது குடும்பத்துடன் நேற்று உறவினர் வீட்டிற்கு வெளியூர் சென்று உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டு உரிமையாளர் விஜயலட்சுமி வீட்டின் கிரில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து விஜயலட்சுமிக்கு போன் மூலம் தகவல் சொல்லியுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது க்ரில் கதவின் பூட்டு, உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் மற்றும் 12,000 பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாயை அழைத்து வந்து சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!