பெரம்பலூரில் முககவசம் அணிந்து வந்த இரத்த கொடையாளருக்கு அபராதம்

பெரம்பலூரில் முககவசம் அணிந்து வந்த இரத்த கொடையாளருக்கு அபராதம்
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்க வந்தார் இரத்த கொடையாளர்.

பெரம்பலூரில் முககவசம் அணிந்து வந்த இரத்த கொடையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட் டுப்படுத்தும் விதமாக முககவசம் அணியாதவர்களுக்குபோலீசார் தலா ரூ .200 அபராதம் விதித்து வருகின்றனர் . இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுக்க ஒரு தனியார் (துளிர்) அறக்கட்ட ளையை சேர்ந்த சூரியகுமார் , வேப்பந்தட்டை பகுதியில் ஒரு ரத்த கொடையாளரை அழைத்து வருவதற்காக நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில், கோனேரிபாளையம் அருகே சென்றார் .

அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவர்களை வழிமறித்து , அவர்களில் ஒருவருக்கு முககவசம் அணியவில்லை என்று கூறி ரூ .200 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது . ஆனால் அவர்கள் 2 பேரும் முககவசம் அணிந்திருந்ததாகவும் , ஆனால் ரசீதில் அபராதம் எதற்காக விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது . முககவசம் அணிந்தும் போலீசார் அபராதம் விதித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், முக கவசம் அணிந்தும் அபராதம் கட்டிய மக்கள் நலன் கருதி பொதுப்பணியை மேற்கொள்ளும் சமூக ஆர்வலர் சூரியகுமார் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் பெட்டியில் போட்டுள்ளேன் இதற்கு தீர்வு வரவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!