பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
X

தமிழக அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட்வரியை குறைக்காததை கண்டித்து பெரம்பலூரில்  பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க கோரி பெரம்பலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு அண்மையில் குறைத்தது.அதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வாட் வரி குறைக்கப்படவில்லை.இதணை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தமிழக அரசை கண்டித்து மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பெட்ரோல், டீசல் விலை மீதான வாட்வரியை குறைக்காத தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.மேலும் வாட் வரியை குறைத்து விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதீயஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!