பாடாலூர் அருகே சாலை விபத்தில் விவசாயி மீது 4 சக்கர வாகனம் மோதி சாவு

பாடாலூர் அருகே சாலை விபத்தில்  விவசாயி மீது 4 சக்கர வாகனம் மோதி சாவு
X

விபத்தில் உயிரிழந்தவரைப் பார்த்து கதறி அழும் குடுமபத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்த கந்தசாமி (வயது -60) விவசாயம் செய்து வருகிறார். இவர் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசியநெடுஞ்சாலையில் வடக்குபுறம் செல்ல வேண்டியவர் தவறாக தெற்கு திசையில் சென்றுள்ளார்.

அப்பொழுது ஆஞ்சநேயர் கோயில் அருகில் சேலம் மாவட்டம்,ஆத்தூர் தாலுகா, பெரியஏரி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (வயது-26) தனது நான்கு சக்கர வாகனத்தில் திருச்சி மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊரான பெரியஏரிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். பாடாலூர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் கந்தசாமி தனது இருசக்கர வாகனத்தில் பால் கறப்பதற்காக எதிர்திசையில் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கந்தசாமி இறந்து போனார். அவரது உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் சத்தியநாதன் நான்கு சக்கர வாகன ஓட்டுனர் அடிபட்டு இருப்பதை கண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். தற்பொழுது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து பாடாலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!