பெரம்பலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்ற 2 பேர் கைது

பெரம்பலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்ற 2 பேர் கைது
X

பெரம்பலூர் அருகே சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்ட இருவருடன் போலீசார்.

பெரம்பலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின் படி,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியபிரகாசம் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் விற்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் காரியானூர் -பெருநிலா ரோட்டில் பஞ்சாயத்து கிணறுக்கு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த காரியானூர் ரமேஷ்,செந்தில் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர்,கைது செய்தும் அவர் விற்பனைக்காக பயன்படுத்திய 10 லிட்டர் நாட்டு சாராயத்தை கைப்பற்றியும், பின்னர் நாட்டு சாராயத்தை விற்பனை செய்ய பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நிலையம் வந்து மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
ai as the future