மின்னணு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு

மின்னணு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு
X
வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியை பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மின்னணு இயந்திரங்களில்வே வேட்பாளர் பெயர் பொருத்தும் பணியை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது அலுவலர்களிடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை தமிழ்நாடு தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனைத்தும் முழுமையாக பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணியின் போதும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி மற்றும் நான்கு பேரூராட்சி ஆகியவைகளுக்கு வரும் 19.2.2022 அன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அரும்பாவூர் பேரூராட்சி மற்றும் பூலாம்பாடி பேரூராட்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குச்சீட்டுகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவைகளை இன்று நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் பொறியாளர்கள் கண்காணிப்பில் வாக்குச்சீட்டுகள் பொருத்தப்பட்டு காப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும். அரும்பாவூர் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் 15வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது மொத்தம் 11,025 வாக்காளர்கள் இங்கு வாக்களிக்க உள்ளனர்.

இதைப்போல பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிகளில் இரண்டு வார்டுகளுக்கு போட்டி எதுவுமின்றி இருவர் அன்னபோஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 13 வார்டுகளுக்கு 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 13 வாக்குச்சாவடியில் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு 8,924 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணிகள் மற்றும் காப்பு அறையில் பாதுகாப்புடன் வைக்கும் பணிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்பு நடைபெறுகிறது. இத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வருகை தந்து அவசியம் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது நேர்முக உதவியாளர் (சத்துணவு) லதா, உதவி இயக்குனர் ஊராட்சிகள் பாரதிதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்) மோகன், அரும்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி. பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்வாசகன் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!