பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாணவியரிடம் விழிப்புணர்வு

பெண்களுக்கு  எதிரான குற்றங்கள் குறித்து மாணவியரிடம் விழிப்புணர்வு
X

குரும்பலூர் அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூரில், கல்லூரி, பள்ளி மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அரசு கலைக் கல்லூரி மற்றும் பொம்மனப்பாடி அரசு உயர் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, பெரம்பலூர் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவலன் SOS செயலி குறித்தும், பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி