பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த அரசு பள்ளிகளுக்கு விருது கலெக்டர் வழங்கல்

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த அரசு பள்ளிகளுக்கு விருது கலெக்டர் வழங்கல்
X
பெரம்பலூரில் சிறந்த அரசு பள்ளிகளுக்கு கலெக்டர் விருது வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த அரசு பள்ளிகளுக்கு விருதுகளை கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. ஶ்ரீீவெங்கட பிரியா மாவட்ட அளவில் சிறந்த. பள்ளிக்கான விருதினை முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் முன்னிலையில் ஊ.ஒ.ந.நி.பள்ளி- கொத்தவாசல், ஊ.ஒ.தொ.பள்ளி-அரும்பாவூர், ஊ.ஒ.தொ.பள்ளி - தேனூர் ஆகிய மூன்று பள்ளிகளுக்கும் வழங்கினர்.

இவ்விருதானது அதிகபடியான மாணவர்கள் சேர்க்கை, மாணவர்களின் கல்விதரம்,பள்ளியில் காய்கறி தோட்டம், சிறப்பான கழிப்பறை வசதி,கணித ஆய்வகம், பாரதிதாசன் பல்கலைகழகத்துடன் இணைந்து கணினி பயிற்சி வழங்கியது,

பள்ளியில் சிலம்பம்,பரதம், கராத்தே, ஜீடோ, ஜிம்னாஸ்டிக் ஆகிய பயிற்சிகள் வழங்கி மாவட்ட, மாநில அளவில் மாணவர்கள் வெற்றி பெற்றமை, பள்ளியில் உட்கட்டமைப்பு மேம்பாடு முதலான சிறப்பான பணிகளை பாராட்டி தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு