குன்னம் அருகே டிராக்டரில் மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ டிரைவர் பலி
விபத்தில் இறந்த சுரேஷ்குமார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சின்னவெண்மணி காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சுரேஷ்குமார் (38) இவருக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
சுரேஷ்குமார் சென்னையில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். சுரேஷ் குமாரின் மனைவி பொங்கல் பண்டிகைக்கு தனது அம்மா வீடான புதுவேட்டகுடி கிராமத்திற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியை அழைத்து வருவதற்கு மோட்டார் சைக்கிளில் புதுவேட்டகுடி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது நல்லறிக்கை அருகே சாலையில் கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் பழுது ஏற்பட்டு சாலை ஓரம் நிறுத்தி வைக்கபட்டிருந்தது. இதை கவனிக்காத சுரேஷ்குமார் டிராக்டரின் பின்பகுதியில் பலமாக மோதி தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டிராக்டரில் பழுது ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை எனவும், சம்பவ இடத்தில் யாரும் இல்லை எனவும், டிராக்டரில் எச்சரிக்கை விளக்குகள் எரியவில்லை எனவும் டிராக்டர் டிரைவர் கவன குறைவால் தான் விபத்து ஏற்பட்டது என்று கூறி அரியலூர் திட்டக்குடி சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் போலீசார் டிரைவரை கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu