கோயில்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்: இந்து அமைப்பினர் ஆட்சியரிடம் மனு
கோயில்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இந்து அமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பாஜக கட்சியின் நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்து கோயில்கள் உள்ள சிலைகள் மற்றும் தேர்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று சிதைக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உபகோவிலான பெரியசாமி கோயில்கள் மற்றும் தனியார் கோயில்களில் சிலைகள் உடைப்பு சம்பவம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஒருவரை மட்டும் கைது கைது செய்துள்ளனர். சிலை உடைப்பு சம்பவத்தில் தனிநபர் செய்திருக்க சாத்தியமில்லை.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து இயக்க பொறுப்பாளர்களின், வியாபார நிறுவனம் இந்து கோயில்கள் ஆகியவை தாக்கப்படுவது திட்டமிட்டு நடத்தப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம், ஆகவே, இதனை இரும்புக்கரம் கொண்டு மாவட்ட நிர்வாகம் கொடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும். அப்பொழுதுதான் மாவட்டத்தில் உண்மையான அமைதி திரும்பும் என்றும் இதற்கான விஷயத்தில், மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப்போக்கையும் சுட்டிக்காட்டி குறிப்பிடப்பட்டிருந்த மனுவினை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இல்லாததால் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுப்பையாவிடம் வழங்கினர்.
ஆர்.எஸ்.எஸ். நகர தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் வழங்கப்பட்ட மனு வழங்கும் நிகழ்ச்சியில், பாஜக மாவட்ட தலைவர் சந்திரசேகர், இந்து முன்னணி திருச்சி மண்டல பொறுப்பாளர் குணசேகரன், ஆர்எஸ்எஸ் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பாளர் விவேகானந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் சாமி. இளங்கோவன், பாஜக மாவட்ட பொது செயலாளர் வேலுசாமி உள்ளிட்ட இந்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பாஜக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu