பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை வருவாய் ஆய்வாளரை தாக்கிய 4 பேர் கைது

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை வருவாய் ஆய்வாளரை தாக்கிய 4 பேர் கைது
X

வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்திற்குள் புகுந்து வருவாய் ஆய்வாளரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை வருவாய் ஆய்வாளரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில், நேற்று தாசில்தார் சரவணன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பசும்பலூர் பகுதி வருவாய் ஆய்வாளர் அன்பரசன் கலந்து கொண்டார்.

அப்போது அங்கு வந்த 4 பேர், வருவாய் ஆய்வாளர் அன்பரசனை, ரத்தினசாமி (39), வெங்கடேஷ் (40), வேலாயுதம் (55) பெருநிலாவை சேர்ந்த மகேந்திரன் (39), ஆகிய நால்வரும், சாதிச்சான்றுக்கு கையெழுத்து போட மாட்டாயா எனக்கூறி தாக்கியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாலுகா அலுவலக ஊழியர்கள் வருவாய் ஆய்வாளரை தாக்கியதை கண்டித்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தாரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து அரும்பாவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணா, தாக்கிய நால்வரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!