இ-சேவை மைய பெண் பணியாளர் மீது தாக்குதல்: எம்எல்ஏ ஆறுதல்

இ-சேவை மைய பெண் பணியாளர் மீது தாக்குதல்: எம்எல்ஏ ஆறுதல்
X

ஆறுதல் கூறிய எம்எல்ஏ.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இ-சேவை மையம் பணியாளருக்கு நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்.

பெரம்பலூர் ஆதார் இ.சேவை மையத்தில் பணி புரிந்து வருபவர் ஜெயலட்சுமி. இவர் பணியில் இருந்தபோது செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கெளதமன் என்பவர் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆதார் கார்டில் திருத்தம் செய்ய ஏதாவது ஒரு ஆதாரம் வேண்டும் என்று ஜெயலட்சுமி கூறியுள்ளார். ஆதாரம் தரமுடியாது எனக்கூறிய கெளதமன், ஜெயலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்தும் தாக்கியுள்ளார். அவர் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் செய்து, காவல்துறையினர் கௌதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஜெயலட்சுமி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று ஜெயலட்சுமிக்கு பிரட், பிஸ்கட் வழங்கி ஆறுதல் கூறினார். இதில் கழக துணைப்பொதுச்செயலாளர் ஆ இராசா. எம.பி. உதவியாளர் பி.அறிவுச்செல்வன் மற்றும் பலர் உடணிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!