லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் ஆ.இராசா எம்.பி, அமைச்சர் வாக்கு சேகரிப்பு

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில்  ஆ.இராசா எம்.பி, அமைச்சர் வாக்கு சேகரிப்பு
X

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய  திமுக எம்பி ஆ. ராசா.

கொரோனா காலத்தில் எத்தனை மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்களை திமுக இழந்துள்ளது

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் - கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.

அதன் பிறகு தி.மு.க. தேர்தல் பிரிவு அலுவலகத்தை ஆ.இராசா.எம்.பி.,திறந்து வைத்தார். இந்த கூட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தி.மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், லெப்பைக்குடிக்காடு பேரூர் கழக செயலாளர் ஏ.எஸ்.ஜாகிர்உசேன், மாவட்ட கவுண்சிலர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எ.ரசூல்அகமது, வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், ஒன்றிய கவுன்சிலர் பெரு.கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ஆ.இராசா. எம்.பி.பேசுகையில், இரண்டாம் தர குடிமக்கள் ஆக்கும் முயற்சியில் பஜ.க.வினர் செயல்பட்டு வருகின்றனர். இங்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரைகிறோம். குடியுரிமை சட்டம் கொண்டு வந்து அகதிகள் முகாமிற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திராவிட இயக்கம் இருக்கும் வரையில் தமிழகத்தில் எங்களை பிரிக்க முடியாது.

கொரோனா காலத்தில் எத்தனை மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்களை திமுக இழந்துள்ளது. முதலமைச்சர் அவரது உயிரையும் பொருட்படுத்தாமல் பம்பரமாக சுற்றி வந்தார். 2011 தேர்தல் அறிக்கை யில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட்,விவசாயத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை என்றும், 2016 தேர்தலில் ரூ.20 க்கு பால் பாக்கெட் வீட்டிற்கு வரும் என்றும், அனைவருக்கும் செல்போன் தருகிறேன் என்று சொன்ன அதிமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று? என்றும் ஆ.இராசா.எம்.பி.பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!