உத்தரகாண்ட் கபடி போட்டியில் பங்கேற்ற பெரம்பலூர் மாணவிக்கு பாராட்டு

உத்தரகாண்ட் கபடி போட்டியில் பங்கேற்ற பெரம்பலூர் மாணவிக்கு பாராட்டு
X

பாராட்டு பெற்ற, அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி பா.அபிநயா.

உத்தகாண்ட் மாநிலத்தில் நடந்த கபடி போட்டியில், தமிழக அணிக்காக பங்கேற்ற பெரம்பலூர் மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்தவர் மாணவி பா.அபிநயா. இவர், அகில இந்தியா அளவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற (16 வயதிற்குட்பட்டோர் பிரிவு) அமெச்சூர் கபடி கழகம் நடத்திய போட்டியில், தமிழக அணிகள் சார்பில் கலந்து கொண்டு இராண்டாமிடம் பெற்றார்.

தமிழகத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி அபிநயா, மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், பள்ளி தலைமையாசிரியர் பெ.முருகேசன் மற்றும் உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!