மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
X
பெரம்பலூரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்றுவருகிறது.

பெரம்பலூரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது.


பெரம்பலூரில் கடந்த 2019ம் ஆண்டு, லஞ்ச வழக்கில் கைதான மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர். வீட்டின் முன் இருந்த மின் கம்பியை மாற்றி அமைக்க கடந்த 2019 ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26 ம் தேதி துறைமங்களத்தை சேர்ந்த சரவணன் என்பவரிடம் ஆயிரம் ரூபாய், லஞ்சம் வாங்கிய போது கைதான பெரம்பலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் வீட்டில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சோதனை நடைபெற்று வருகிறது.

பெரம்பலூரில் டிஎஸ்பி., சந்திரசேகர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், வெண்பாவூரிலுள்ள மாணிக்கத்தின் தாயார் வீட்டில், டிஎஸ்டி., ஹேமச்சித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசாரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!