பாடாலூர் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் ஜீப் மோதி உயிரிழப்பு

பாடாலூர் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் ஜீப்  மோதி உயிரிழப்பு
X
திருச்சி -சென்னை சாலையில் பாடாலூர் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் ஜீப் மோதி உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள நாரணமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட விஜயகோபாலபுரம் என்ற கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் திருச்சியில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டு இருந்த ஜீப் மோதியதில் கால் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைத்தார்.

பின் பாடாலூர் காவல்நிலையத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் பிரேதத்தை கைப்பற்றி உடல்கூறு அறுவை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் பெரம்பலூர் வ.உ.சி நகரை சேர்ந்த மருதைராஜ் (வயது-60) என தெரிய வந்துள்ளது. மேலும் ஜீப் டிரைவரை கைது செய்ததில் அவர் பெயர் நந்தகோபால்(வயது- 62), த/பெ ராமசந்திரன், சின்னப்பாலம், கொடைக்கானல் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

Tags

Next Story
why is ai important to the future