பெரம்பலூர்: அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூர் மாவட்டத்தில் விடுதை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க. பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து வீர வணக்க கோஷங்கள், எழுப்பப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக வெங்கலம் கிராமத்தில் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலு, வெற்றியழகன், இடிமுழக்கம், செல்வராஜ், ராஜேந்திரன் ,ஆனந்த் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu