பெரம்பலூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அக்காள்-தம்பி மனு தாக்கல்

பெரம்பலூர் நகராட்சி  தேர்தலில் போட்டியிடும்  அக்காள்-தம்பி மனு தாக்கல்
X

பெரம்பலூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அக்காள், தம்பி மனு தாக்கல் செய்ய வந்தனர்.

பெரம்பலூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அக்காள்-தம்பி மனு தாக்கல் செய்தனர்.

பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 2 பேரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், மக்கள் நீதி மய்யம் சார்பில் 5 பேர் சுயேட்சை 2 என 10 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.இதுவரையில், பெரம்பலூர் நகராட்சியில் 15 பேரும், லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 7 பேரும், குரும்பலூர் பேரூராட்சியில் 6 பேரும், பூலாம்பாடி பேரூராட்சியில் 4 பேரும், அரும்பாவூர் பேரூராட்சியில் 3 பேரும் என மொத்தம் 35 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் .

பெரம்பலூர் நகராட்சி 1வது வார்டு பா.ம.க. வேட்பாளராக ஷர்மிளா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது தம்பி ஜகாங்கீர் 14 வது வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!