பெரம்பலூரில் அதிமுக கொடி தீ வைத்து எரிப்பு: போலீசார் விசாரணை
தீவைத்து எரிக்கப்பட்ட அதிமுக கொடி கம்பம்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராத்தில் மர்ம நபர்கள் சிலர், அதிமுக கொடி கம்ப மேடையில் அமர்ந்து மது அருந்தி விட்டு கம்பத்தின் மேல் பறக்கும் அதிமுக கொடியினை கயிறுடன் கழற்றி தீவைத்து எரித்து உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக கொடி மேடையை பக்க வாட்டுகளில் சேதம் செய்துள்ளனர். பக்கவாட்டுகளை சேதம் செய்தவரை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் திமுக கொடியை தீ வைத்து எரிக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இதனால் அதிமுக கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இச்சம்பம் சம்மந்தமாக குன்னம் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுக்கபட்டதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீ வைத்து எரிக்கப்பட்ட கொடியை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை விசாரணையில் பரவாய் கிராமத்தை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu