குரும்பலூர் அருகே 80 வயது மூதாட்டி ஓடை நீரில் மூழ்கி பலி

குரும்பலூர் அருகே  80 வயது மூதாட்டி ஓடை நீரில் மூழ்கி பலி
X

மூதாட்சி இறந்தது குறித்து விசாரித்த கிராமத்தினர். 

குரும்பலூர் பேருராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, ஓடை நீரில் மூழ்கி பலியானார்.

பெரம்பலூர் அடுத்துள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில், மாதா கோவில் தெருவில் வசித்து வந்தவர், நல்லம்மாள், வயது 80, இவரது கணவர் சுப்பு. இவர் இறந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிய நிலையில், இவர்களுக்கு பிள்ளைகள் யாரும் இல்லை. நல்லம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக நல்லம்மாளை காணவில்லை. அருகே இருந்தவர்கள் தேடிப்பார்த்து விசாரித்து வந்த நிலையில், அதே பாளையம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் ஓடை பகுதியில், பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியான நல்லம்மாள் என்பது தெரியவந்தது. நல்லம்மாள் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மூதாட்டி உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!