பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் உறுதிமொழி ஏற்பு
X

மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் வாக்காளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

பெரம்பலூரில் 12-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளிப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 12-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிய வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா, வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீவெங்கடபிரியா, வாக்காளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

12வது வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று (25.01.2022) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இளம் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொண்ட செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த 2 இளம் வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கினார். அதனைத்தொடர்ந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா, தலைமையில் அனைத்து துறை பணியாளர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) தி.சுப்பையா, தேர்தல் வட்டாட்சியர் திரு. சீனிவாசன், உள்ளிட்ட அலுவலர்கள் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில், தேசிய வாக்காளர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாக்காளர்களிடையே தேர்தல் நடைமுறைகள் குறித்தும், வாக்காளராக பதிவு செய்தல் குறித்தும், தேர்தலில் பங்கேற்பது குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் சுவரொட்டிகள் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களிடையே தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தும் விதமாக ஒருவரி முழக்கம் உருவாக்கம், சுவரொட்டி உருவாக்கம், கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி, மற்றும குழு நடனப் போட்டிகள் கடந்த டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்டு, அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வட்ட அளவில் நடைபெறும் வாக்காளர் தின கொண்டாடத்தின் போது அந்த அந்ந உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர்களால் பாராட்டு சான்றிதழ்களும், பல்வேறு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டது.

இவை போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குசாவடி அமைவிடங்களிலும் அப்பகுதி வாக்காளர்களால் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!