பெரம்பலூர் அருகே பிரதமர் மோடி உடல் நலம் காக்க வேண்டி சிறப்பு யாகம்

பெரம்பலூர் அருகே  பிரதமர் மோடி உடல் நலம் காக்க வேண்டி சிறப்பு யாகம்
X

பிரதமர் மோடி நலக்க காக்க வேண்டி பெரம்பலூர் அருகே சிறப்பு யாகம் நடந்தது.

பெரம்பலூர் அருகே பிரதமர் மோடி உடல் நலம் காக்க வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மேலப்புலியூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஆயுள் காக்கவும், ஆரோக்கியம் மேம்படவும், உலக மக்கள் கொடிய நோயிலிருந்து விடுபடவும், அனைவரின் நலம் காக்கவும், நாட்டில் எல்லா வளங்களும் செழிப்புறவும், இந்துமதம் தழைக்கவும் இந்த பூஜை நடைபெற்றது.

பௌர்ணமி இரவு பூஜையில் யாகம் வளர்த்து சிவன், பார்வதி, ராமர், தன்வந்திரி,மாண்டி என அனைத்து தெய்வத்திற்கும் ஹோமத்தின் மூலம் நன்றி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!