பெரம்பலூர் -அரியலூர் சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்தது சிமெண்ட் லோடு லாரி

பெரம்பலூர் -அரியலூர் சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்தது சிமெண்ட் லோடு லாரி
X
பெரம்பலூர் அரியலூர் சாலையில் ஒதியம் பிரிவு ரோட்டில் லாரி கவிழ்ந்து  விபத்து ஏற்பட்டது.
பெரம்பலூர் -அரியலூர் சாலையில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் -அசூர் குறுக்குச்சாலை அருகே இன்று காலை சுமார் 6.00 மணியளவில் அரியலூரிலிருந்து குன்னம் வழியாக நாகர்கோவிலை நோக்கி சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி ஒதியம் அசூர் குறுக்குசாலை அருகே சென்றபோது கண்ணிமைக்கும் நொடியில் பள்ளத்தை நோக்கி சீறிப்பாய்ந்து தலை கீழாக கவிந்தது. இந்த லாரியில் சுமார் 34 டன் எடை கொண்ட சிமெண்ட் மூட்டைகள் இருந்தன. இதனை வாகனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்ததாக கூறப்படுகின்றது. எந்த விதமான உயிர் சேதமும் நடை பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கடந்த 23-11-21 அன்று இதே இடத்தில் ஓர் அரசு பேருந்து தடம் புரண்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னே அப்பகுதியல் ரவுண்டானா கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இவ்விடத்தில் ரவுண்டானா தேவையில்லை என்பதை பொதுமக்களின் கோரிக்கையாக செய்திகள் வெளியாயின. மேலும் இவ்விடத்தில் பொதுமக்கள் நிற்பதற்கு கூட பேருந்து நிழற்குடை இல்லை. பக்கவாட்டுகளில் பாதுகாப்பு இல்லாததால் வாகனங்களை ஒதுக்கி நிறுத்தினால் கூட பள்ளத்தை நோக்கி ஓட வாய்ப்புள்ளது சாலை மட்டுமே விரிவாக காணப்படுகின்றது.

பாதுகாப்பு இல்லாத ரவுண்டானாவால் பல உயிர் சேதம் நடந்தால் மட்டுமே அவ்விடத்தை அரசு சீர் செய்யுமா? அதிகாலை நேரம் என்பதால் எந்தவிதமான உயிர்சேதமும் நடைபெறவில்லை. மேலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்பது தெரியவருகிறது. இவ்விடத்தில் நிழல் குடை மற்றும் மின் விளக்கு அமைத்து தர வேண்டும். மேலும் தமிழக அரசு பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத ரவுண்டானாவாக அமைத்து தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!