பெரம்பலூர் அருகே பட்டதாரி இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து பலி

பெரம்பலூர் அருகே பட்டதாரி இளைஞர்  கிணற்றில் தவறி விழுந்து பலி
X
இளைஞர் தவறி விழுந்து இறந்த கிணற்றில் அவரது உடலை தேடும் பணி நடந்தது.
பெரம்பலூர் அருகே பட்டதாரி இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

பெரம்பலூர் சங்குபேட்டையை சேர்ந்த இளைஞர் வசந்தகுமார்.கல்லூரி படிப்பு முடித்து பர்கர் கடையில் வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் அருகே உள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.நீச்சல் தெரியாததால் வசந்தகுமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இது தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் இறங்கினர்.சுமார் ஒரு மணி நேர போரட்டத்திற்கு பிறகு இளைஞரின் உடல் மீட்கப்பட்டது. துணி துவைக்கச் சென்ற போது பட்டதாரி இளைஞர் ஒருவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!