பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் நிரம்பிய 750 ஏக்கர் பரப்பளவு ஏரி

பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் நிரம்பிய 750 ஏக்கர் பரப்பளவு ஏரி
X
750 ஏக்கர் பரப்பளவுள்ள எசனை பெரிய ஏரி முழு அளவில் நிரம்பி உள்ளது.
பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் 750 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய ஏரி 17 ஆண்டுகளுக்கு பின் தொடர் மழையால் நிரம்பி உள்ளது.

பெரம்பலூர் அடுத்துள்ள எசனை கிராமத்தில் ஆத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பெரிய ஏரி 750 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி, கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஏரி முழுவதுமாக நிரம்பி கடைகால் வழியாக தண்ணீர் வெளியேறியது,

நிரம்பி வழியும் நீரை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியா பன்னீர்செல்வம். கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர்கள்,விவசாயிகள் ஊர் பொதுமக்கள் என பலரும் ஏரிக்குச் சென்று, மாலை அணிவித்து தேங்காய், பழம், வைத்து பத்தி, சூடம் ஏற்றி வழிபாடுசெய்து மலர் தூவி தண்ணீரை வரவேற்று மகிழ்ந்தனர்.இதனையடுத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன,

இதுகுறித்து விவசாயிகள் கிராம மக்கள் தெரிவிக்கும் பொழுது கடந்த 17 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது பெய்த மழையால் ஏரி நிரம்பி உள்ளது. இதனால் கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பெரும் ஆதாரமாக விளங்கும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!