மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு

மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு
X
பெரம்பலூர் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமம் தெற்குதெருவை சேர்ந்த செந்தில்குமார் மனைவி ஜெயலட்சுமி(36) இவர் குன்னத்தில் இருந்து மூங்கில்பாடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள நத்தஏரி அருகே தனது மாடுகளை மேய்தது கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் இவரிடம் விலாசம் கேட்பதுபோல் நடித்து அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை பறிக்க முயற்ச்சித்துள்ளனர். ஆனால் ஜெயலட்சுமி தனது சங்கிலியை விடாமல் பிடித்து கொண்டு சத்தம் போட்டுள்ளார்.உடனடியாக அவரை கீழே தள்ளிவிட்டு தங்க சங்கிலியை பறித்து கொண்டு அந்த மூன்று மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து அவர் குன்னம் போலீசில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் மாறன் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

Tags

Next Story
ai healthcare products