பெரம்பலூர் மாவட்டத்தில் 66 அரசு பள்ளி கட்டடங்கள் தகுதியற்றவை: அதிர்ச்சி தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் 66 அரசுபள்ளி வகுப்பறை கட்டடங்கள் செயல்படுவதற்கு தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுபள்ளி கட்டங்கள் தகுதி குறித்து சிலதினங்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வில்செயல்பாட்டிற்கு தகுதியற்ற கட்டடங்களை கண்டறிந்து பட்டியலிடப்பட்டது.இந்த வகுப்பறை கட்டடங்களை இடித்து விட்டு புதிய கட்டடங்கள் கட்ட திட்டமிடப்ட்டிருந்தது. இந்த நிலையயில் தகுதியற்றதாக கண்டறியப்பட்டுள்ள அரசுபள்ளி வகுப்பறை கட்டடங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.அதன்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 24, வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 22, ஆலத்தூர் ஒன்றியத்தில் 9, வேப்பூர் ஒன்றியத்தில்11, என மொத்தம் 66 வகுப்பறைகளின் கட்டடங்கள் தகுதியற்றைவை என கண்டறியப்பட்டுள்ளது.
இது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் விபரங்கள் ஆகும்.அதே போல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 14 வகுப்பறை கட்டடங்கள் தகுதியற்றவை என தெரியவந்துள்ளது. பழுதடைந்த வகையிலும், கட்டி முடிக்கப்பட்டு நீண்ட வருடம் ஆகிவிட்டது என்ற வகையிலும் தகுதியற்ற கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கட்டடங்களில் மாணவர்களை அனுமதிக்க கூடாது என முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் பாதிப்படைந்த கட்டங்களின் வெளியேயும், வேறு வகுப்பறைகளிலும் அமர்ந்து பயின்றுவருகின்றனர். இருந்த போதும் விளையாடுவதற்காகவும், பிற காரணங்களுக்காகவும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் சிதிலமடைந்த கட்டடப்பகுதிக்கு செல்வார்கள் என்பதை மறுப்பதிற்கில்லை என்றே கூறலாம்.அப்போது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து விடவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.
எனவே இந்த விசயத்தில் காலதாமதம் ஆகாமல் செயல்பட தகுதியற்ற கட்டடங்களாக கண்டறியப்பட்டுள்ள அரசுபள்ளி வகுப்பறை கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லையில் நடைபெற்ற பள்ளி சம்பவம் போல் இன்னொரு சம்பவம் நடைபெறுவதற்கு முன்னரே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu