பெரம்பலூரில் 60 கிலோ நெகிழிபைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை

பெரம்பலூரில் 60 கிலோ நெகிழிபைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை
X

பெரம்பலூரில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழி பைகளுடன் அதிகாரிகள் உள்ளனர்.

பெரம்பலூரில் 60 கிலோ நெகிழிபைகளை பறிமுதல் செய்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மக்காத தன்மையுடைய நெகிழிபைகள் பயன்பாட்டிற்கு அரசு தடைவிதித்துள்ளது.இந்த நிலையில் பெரம்பலூரில் மக்காத நெகிழி பைகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் புதியபேருந்துநிலையம் பகுதியில்சோதனை செய்தனர்.அப்போது 6 கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட 60 கிலோ நெகிழிபைகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என ஆணையர் குமரி மன்னன் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!