பெரம்பலூர்: வெள்ளப்பெருக்கால் 500 ஏக்கர் விவசாய பயிர்கள் பாதிப்பு

பெரம்பலூர்: வெள்ளப்பெருக்கால்  500 ஏக்கர் விவசாய பயிர்கள் பாதிப்பு
X

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் மரவள்ளி கிழங்கு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்கள் பாதிப்ப அடைந்துள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது.மேலும் பச்சமலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது.அதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் மலையாளப்பட்டி,அ.மேட்டுர்,கோரையாறு பகுதிகளில் உள்ள ஆறு மற்றும் ஓடைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.இந்ந வெள்ளநீர் விவசாய பயிர்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் மரவள்ளிகிழங்கு மஞ்சள், கருணைகிழங்கு, சின்னவெங்காயம், சம்பங்கிபூ உள்ளிட்ட பயிர்கள் பலத்த பாதிப்படைந்துள்ளது.மேலும் விவசாய நிலங்களில் மழை நீர் வடிய வழியில்லாமல் பயிர்களை சூழ்ந்துள்ளது.இதனால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.மாவட்ட நிர்வாகம் இந்த பகுதிகளில் முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story