பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 361 பேர் வேட்புமனு தாக்கல்

பெரம்பலூர் மாவட்டத்தில்  மொத்தம் 361 பேர் வேட்புமனு தாக்கல்
X

பெரம்பலூரில் வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர் 

பெரம்பலூர் நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட 361 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 81 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

பெரம்பலூர் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏற்கனவே 41 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஒரே நாளில் 85 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தமாக திமுக - 18, அதிமுக -21, பாஜக - 9, பாமக- 8 நாம் தமிழர் - 8, மக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகள் தலா - 6, மதிமுக, விடுதலை சிறுத்தை, மா,கம்யூ, தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் தலா ஒருவரும், சுயேட்சை- 40 பேரும் என மொத்தம் 126 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

பேரூராட்சிகள் :

குரும்பலூர் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏற்கனவே 27 பேர் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். நேற்று 27 பேர் வேட்பாளர்கள் என மொத்தம் 54 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். அரும்பாவூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏற்கனவே 13 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். நேற்று 35 வேட்பாளர்கள் என மொத்தம் 48 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

பூலாம்பாடி பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் ஏற்கனவே 21 பேர் வேட்புமனுக்கள் செய்திருந்தனர். நேற்று 15 வேட்பாளர்கள் என மொத்தம் 36 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

லெப்பைகுடிகாடு பேரூராட்சியில் ஏற்கனவே 53 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று 44 மனுக்கள் என மொத்தம் 97 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் போட்டியிட 126 பேரும், 4 பேரூராட்சியில் உள்ள 60 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 235 பேரும் என மொத்தம் 361 பேர் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?