பெரம்பலூரில் பேராசிரியர் அன்பழகன் 2-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி
பெரம்பலூரில் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தி.மு.க. மறைந்த பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன்- சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதாஇஸமாயில், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ். அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, ஒன்றிய கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், நகராட்சி துணை தலைவர் து.ஹரிபாஸ்கர்,வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பாளை.மணிவண்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் களரம்பட்டி சதீஷ், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல்,வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பார் ரா.சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu