ரூ.3 லட்சம் மதிப்புள்ள 25 ஸ்மார்ட் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் பெரம்பலூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு மணி ஒப்படைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் 40 ஸ்மார்ட்போன்கள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.அதில் 3 லட்ச ரூபாய் மதிப்பிலான 25 ஸ்மார்ட்போன்கள் மீட்கப்பட்டது.அதே போல் இணையவழியில் வேலைவாங்கிதருவது,பரிசுபொருட்கள் வழங்குவது,போலிபாஸ்போர்ட் இணையதள முகவரி மோசடி போன்றவற்றில் ஏமாற்றப்பட்ட 69 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சைபர் பிரிவு காவல் துறையினர் மீட்டனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மணி,மீட்கப்பட்ட செல்போன்களையும்,பணத்தையும் உரியவர்களிடத்தில் ஒப்படைத்தார்.மேலும் அவர் சைபர் கிரைம் போலீசாருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu