பூலாம்பாடி பேரூராட்சி: போட்டியின்றி தேர்வு பெற்ற 2 பேருக்கு ஆ. ராசா வாழ்த்து

பூலாம்பாடி பேரூராட்சி: போட்டியின்றி தேர்வு பெற்ற 2 பேருக்கு ஆ. ராசா வாழ்த்து
X

பூலாம்பாடி பேரூராட்சியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் ஆ. ராசாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பூலாம்பாடி பேரூராட்சியில் போட்டியின்றி தேர்வு பெற்ற 2 பேருக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா வாழ்த்து தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம்,பூலாம்பாடி பேரூராட்சிவார்டு உறுப்பினர் பதவிக்கு வார்டு எண்- 6 ல் மாணிக்கம்,வார்டு எண்- 11 ல் பூங்கொடி ஆகிய இருவர் மட்டுமே தி.மு.க.சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் இருவரும் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ராசாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்எம்.பிரபாகரன்,ஒன்றிய கழக செயலாளர் எஸ்.நல்லதம்பி ,பூலாம்பாடி மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture