பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 16 வது பட்டமளிப்பு விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 16 வது பட்டமளிப்பு விழா
X

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 16 ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 16 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 16 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பல்கலைக்கழக தரவரிசை பட்டியில் இடம்பெற்ற 29 பேர் உட்பட 1681 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

கல்விமுறை மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டதாக மட்டும் இருக்கக்கூடாது அது புதுமை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோரை சார்ந்ததாகவே இருக்க வேண்டும் ஒவ்வொரு மாணவரும் கண்டுபிடிப்பாளராக இருக்கவேண்டும் வேலை தேடுபவர்களாக இருப்பதைவிட வேலை அளிப்பதாக இருக்க வேண்டும் அறிவியல் முதல் மருத்துவம் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது தொழில்நுட்பக் கல்வி முறையின் இடைவெளியையும் அவற்றை கற்பதற்கான வழிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

பட்டமளிப்பு விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் அனந்தலக்ஷ்மி கதிரவன், அறக்கட்டளை உறுப்பினர் ராஜபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கல்லூரி துணை முதல்வர் நந்தகுமார் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் வேல்முருகன் ,முனைவர் அன்பரசன் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர் நிறைவாக கல்லூரி முதல்வர் முனைவர் துரைராஜ் நன்றி கூறினார்.

Tags

Next Story
why is ai important to the future