/* */

தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட 13- வது மாநாடு

தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட 13- வது மாநாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட 13- வது மாநாடு
X

பெரம்பலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் பொன். ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் மாநில செயற்குழு உறுப்பினர் ரஞ்சிதா வரவேற்றார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பெரியசாமி துவக்கிவைத்து உரை நிகழ்த்தினார். நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் கொளஞ்சி வாசு அறிக்கை சமர்ப்பித்தார். வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் மணிமேகலை சமர்ப்பித்தார்.

மாநாட்டை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரிஅனந்தன், மாவட்டச் செயலாளர் இளங்கோவன் மற்றும் துறைவாரி சங்க நிர்வாகிகளும் வாழ்த்தி பேசினார்கள். மாநாடு நிறைவாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக மணிமேகலை (வேப்பூர் ஒன்றியம்), மாவட்ட செயலாளராக கொளஞ்சி வாசு (ஆலத்தூர் ஒன்றியம்), பொருளாளராக மருதாம்பாள் பெரம்பலூர் ஒன்றியம், மாநில செயற்குழு உறுப்பினராக ரஞ்சிதா (வேப்பந்தட்டை ஒன்றியம்), மாவட்ட துணைத் தலைவர்களாக சாந்தி (வேப்பூர் ஒன்றியம்), செல்வி (வேப்பந்தட்டை ஒன்றியம்), ரேவதி (ஆலத்தூர் ஒன்றியம்), ஏவல் மேரி (பெரம்பலூர் ஒன்றியம்), இணைச் செயலாளர்களாக தமிழ்மணி (ஆலத்தூர் ஒன்றியம்), வெங்கடாசலம் (வேப்பூர் ஒன்றியம்), செல்வராணி (வேப்பந்தட்டை ஒன்றியம்), செல்வி (பெரம்பலூர் ஒன்றியம்), ஆகியோரும் தணிக்கையாளர்களாக அருள்மொழி, லட்சுமி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர் .நிறைவாக மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

Updated On: 6 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க