பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை கொடியசைத்து துவக்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை கொடியசைத்து துவக்கம்
X

பெரம்பலூரில் ஆம்புலன்ஸ் சேவையை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் பயன்பாட்டிற்காக அனைத்து மாவட்டத்திற்கும் மொத்தம் 188 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனங்களை வழங்கினார். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனமும், 3 பழைய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மாற்றாகவும் வழங்கப்பட்டது.

லப்பைக்குடிக்காடு, செட்டிகுளம் மற்றும் பாடாலூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 3 வாகனங்களை தலா சுமார் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தும் கை களத்தூர் மற்றும் வேப்பூர் ஆகிய ஊர்களுக்கு புதியதாக இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த 5 வாகனங்களின் மதிப்பு சுமார் ரூ.1,10,00,000 ஆகும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 14 எண்ணிக்கையிலான 108 வாகனங்கள் இயங்கி வருகின்றது. 2 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கைகளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நிறுத்தப்பட்டு சேவை வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சி.ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அர்சுணன், தேசிய சுகாதாரத்துறை மாவட்ட திட்ட மேலாளர் அன்பரசு, 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட திட்ட மேலாளர் அறிவுகரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil