பெரம்பலூரில் 102 கிலோ போதைப் பொருட்களுடன் வட மாநில இளைஞர் கைது

பெரம்பலூரில் 102 கிலோ போதைப் பொருட்களுடன் வட மாநில இளைஞர் கைது
X

பெரம்பலூரில் போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர்.

பெரம்பலூரில் 102 கிலோ போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூரில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை ஒரு நபர் தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போதைப் பொருள் விற்பனை தடுப்பு தனிப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.

அதன்பேரில் தனிப்படை ஜமாலியாநகர் பகுதிகளில் சோதனையிட்டதில் அங்கு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மொத்தம் 103 கிலோ ,ரூபாய் 50, 000/- மதிப்பிலான போதைப் பொருட்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல்செய்யப்பட்டது.இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர்மாவட்டத்தை சேர்ந்த கான்சிங்(39)என்பவரை போலீசார் கைது செய்ததுடன்,போதை பொருள் விற்பனை செய்ய பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai and future cities