கார்த்திகை அமாவாசை: பெரம்பலூர் குளத்தில் 1008 ஜோதி ஏற்றி வழிபாடு

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திரவுபதி தெப்பக்குளத்தில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பியதை முன்னிட்டும், பித்ருக்களுக்கு உகந்த கார்த்திகை அமாவாசை முன்னிட்டும், பெரம்பலூர் பிரம்மரிஷி மலை காகபுஜண்டர் தலையாட்டி சித்தரின் அருளாசியுடன், அன்னை சித்தர் ராஜ்குமார் குருஜியின் அருளாசியுடன் பெரம்பலூர் ஆன்மீக மெய்யன்பர்கள் இணைந்து நடத்தும் உலகமக்கள் நலன்கருதி 1008 விளக்கு ஜோதி வழிபாடு நடைபெற்றது.
உலக மக்கள் நலம் பெற வேண்டிய தற்போது உள்ள இயற்கை சீற்றங்கள் பேரிடர்களில் இருந்து மக்களைக் காக்கவும் அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் துன்பம் அகன்று நன்மை பெருகிட, தீப ஒளி ஜோதிப் பிரகாசம் என்று நிலைத்திட, அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோவில் பின்புறம் உள்ள, திரௌபதி தெப்பகுளத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி மாலை, அகவல் பாராயணத்துடன் ஜோதி வழிபாடு நடைபெற்றது. இதில், பெண்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் தெப்பக்குளம் சுற்றிலும் அகல் விளக்கை ஏற்றி வைத்து தண்ணீரிலும் விளக்கை மிதக்கவிட்டு ஜோதி வழிபாடு செய்தனர்.
எளம்பலூர் பிரம்மரிஷி மலை ரோகினி மாதாஜி தலைமையில் நடைபெற்ற விழாவில், தவயோகி சுந்தர மகாலிங்கம், தவயோகி தவசிநாதன் சுவாமிகள், சட்ட ஆலோசகர் சுந்தர்ராஜன், கருங்குழி ஊராட்சி தலைவர் கிஷோர் குமார், மற்றும் கண்ணபிரான் திருஞானம், உள்ளிட்ட மகா சித்தர்கள் டிரஸ் மெய்யன்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu