முடிந்தது புரட்டாசி சனிக்கிழமை. மீன் கடைகளில் அலைமோதும் அசைவ பிரியர்கள்
கோப்புப்படம்
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் பலர் அசைவ உணவுகளை தவிர்த்து, விரதம் இருந்து தினந்தோறும் கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம் என்பதால் கடந்த நான்கு வாரங்களாக மீன் மற்றும் இறைச்சி சந்தைகள் களை இழந்து காணப்பட்டன. இந்நிலையில் புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமையும் நிறைவு பெற்றதால் இன்று அதிகாலை முதலே மீன் சந்தைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
சென்னை காசிமேட்டில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்களை வாங்க அசைவப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம் ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக மீன் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் இன்று காசிமேட்டில் மீன்களை வாங்க மக்கள் கோட்டம் அலைமோதுகிறது.
விசைப் படகுகளில் கடலுக்குசென்று திரும்பிய மீனவர்கள், வஞ்சிரம், வவ்வால், ஷீலா, சங்கரா, பால் சுறா, தோல்பாறை உள்ளிட்ட மீன்களை அதிக அளவு பிடித்து வந்தனர். இதனால், பெரிய மீன்கள்அதிகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
கூட்டம் அதிகமாக இருந்ததால் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது. அந்த வகையில், வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.650 முதல் ரூ.700 வரையும், சங்கரா ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ. 300 வரையும், வவ்வால் ஒரு கிலோ 400 ரூபாயும், நெத்திலி ஒரு கிலோ ரூ. 250 முதல் ரூ.300 வரையும், இறால் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மீன்களை பல மடங்கு உயர்ந்துள்ள போதும் அவற்றை பொருட்படுத்தாமல் மக்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதே போல கடவாய், கொடுவா, கடம்பா, பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகு வியாபாரம் களைகட்டியதால் மீன் வியாபாரிகள் உற்சாகமடைந்துள்ளனர்
நள்ளிரவு 2 மணி அளவில் ஏல முறையில் தொடங்கும் விற்பனையில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், அசைவ பிரியர்கள் ஆகியோர் மீன்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். மீன்களின் விலை பொருத்த வரையில் கடந்த வாரத்தை விட சற்று மீன்களின் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu