மக்களே உஷார்.. ஏமாறாதீங்க.. கோடிக்கணக்கில் உலா வரும் 'ஸ்க்ராட்ச்' கார்டுகள்

மக்களே உஷார்.. ஏமாறாதீங்க.. கோடிக்கணக்கில் உலா வரும் ஸ்க்ராட்ச் கார்டுகள்
X
நாடு முழுவதும் தனியார் ஷாப்பிங் நிறுவனத்தின் பெயரில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளதாக போலி கடிதங்களுடன் 'ஸ்க்ராட்ச்' கார்டுகள் உலா வருகின்றன.

நாடு முழுவதும் தனியார் ஷாப்பிங் நிறுவனமான 'நாப்டால்' பெயரில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளதாக போலி கடிதங்கள் உலா வருகின்றன.

இந்த கடிதங்கள் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவிலிருந்து விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் நாப்டால் ஆன்லைன் நிறுவனத்தில் 12ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் தங்களுக்கான ஸ்க்ராட்ச் கார்டு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் உள்ள பரிசுகளை பெற பிரத்யேக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வ நாப்டால் நிறுவனத்தில் கஸ்டமர் கேர் நம்பரை தொடர்புகொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

மேலும் கார் மற்றும் ரொக்கப் பரிசுகளை பெற தபால் செலவு, வரிகள் உள்ளிட்ட ஆவண செலவுகளை முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதில் கொடுக்கப்பட்ட பிரத்யேக தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டால் தொடர்பு எல்லைக்கு அப்பாற் உள்ளதாக வருகிறது. இதனையடுத்து மறுநாள் தொடர்புகொண்ட நம்பருக்கு அழைப்பு வருகிறது. அதில் உங்களுடைய கோடு தெரிவியுங்கள் என இந்தி கலந்த தமிழில் பேசுகின்றனர். உங்களுக்கு குறிப்பிட்ட பரிசு விழுந்துள்ளதாகவும், அதற்காக உங்களுடைய வங்கி கணக்கு புத்தகமும், பரிசுத்தொகைக்கான ஸ்க்ராட்ச் கார்டையும் அனுப்பிவிட்டு இந்த நம்பருக்கு அழையுங்கள் என கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அனுப்பியுள்ள ஸ்க்ராட்ச் கார்டில் உள்ள பரிசுத் தொகையும் அவர்கள் தெரிவிக்கும் பரித்தொகையும் வேறுபாடு காணப்படுகிறது.

இந்நிலையில், இந்த தகவல் உண்மையா அல்லது பொய்யா? என அதிகாரப்பூர்வ நாப்டால் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் நம்பரில் தொடர்புகொண்டு பேசும்போது, அது மாதிரியான திட்டம் நாங்கள் அறிமுகப்படுத்தவில்லை. இது போலியான தகவல். இதனை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பு ஒருவருக்கு மட்டுமல்ல; நாடு முழுவதும் கோடிக்கணக்கான பேருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இணையவழி தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் கார்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட ரொக்கப் பரிசுகள் விழுந்துள்ளதாக அனுப்பி வருகின்றனர். இதனைத் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். இதுவும் ஒரு வகையான ஆன்லைன் மோசடியே. இதனால் கோடிக்கணக்கில் அவர்கள் பணத்தை சுருட்ட இது மாதிரியான பொய்தகவல்களை கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பொதுமக்கள் அறிந்துகொள்ளவும், ஆன்லைன் பண மோசடியில் ஏமாறாமல் இருக்கவும் ஏதுவாக இருக்கும். இந்த மோசடியிலிருந்து மக்களை பாதுகாக்க அரசும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் வாயிலாக மக்கள் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க செய்தியை பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகப்படியாக பகிரவும். இதுவே நாம் சமூகத்தின் மீது வைத்துள்ள அக்கறையும் ஆகும். டுவிட்டர் லிங்க்: Instanews2021

Tags

Next Story