/* */

ரயில்களில் பயணிகள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை-ரயில்வே நிர்வாகம்

ரயில்நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடை முறை திரும்ப பெறப்பட்டது

HIGHLIGHTS

ரயில்களில் பயணிகள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை-ரயில்வே நிர்வாகம்
X

ரயில்நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட வந்த 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறை திரும்ப பெறப்பட்டது.

கொரோனா பரவலுக்குப் பிறகு ரயில்களில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதை மீறுபவர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது நோய் பரவல் மிகவும் குறைந்து விட்டது. ஆகவே அனைத்து மாநிலங்களிலும் பொது இடங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளன.

இதேபோல ரயில்களிலும் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது சேரும் இடத்தின் முகவரியையும் குறிப்பிட வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 15 April 2022 5:06 AM GMT

Related News