நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ்-மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வாய்ப்பு?
பைல் படம்
கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தனியே சந்தித்து உரையாடியுள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் இல்லாவிட்டாலும் ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பதவியேற்பு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
கர்நாடக தேர்தல் வெற்றிக்கு மட்டுமல்ல, வெற்றி பெற்ற முறைக்கும் பாராட்டுக்கள் என ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்தார். காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதன் மூலம் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரசுடன் இணைந்து பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கடந்த 30.04.23 அன்று முரசொலி நாளிதழில் எழுதப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்ட நிலையில், கர்நாடக தேர்தலிலும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் கமல்ஹாசன். அதேபோல முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்திருந்தார் கமல்ஹாசன்.
இதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் மற்றும் திமுக வோடு நெருக்கம் காட்டி வருவதால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu