சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
X

சென்னை மெட்ரோ ரயில் (கோப்பு படம்)

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 01.05.2024 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தும் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

​சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் பின்வரும்மாற்றங்களை செய்துள்ளது.

கடந்த 30 நாட்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ பயணிகளுக்கு மாதாந்திர பாஸ்வசதி, விம்கோ நகர் பணிமனை, ஸ்ரீ தியாகராய கல்லூரி, நேரு பூங்கா, கோயம்பேடு, அசோக் நகர்மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ஆகிய 6 மெட்ரோ இரயில் நிலையங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய வண்ணாரப்பேட்டை, நந்தனம், எழும்பூர் மற்றும் செனாய் நகர் மெட்ரோ ஆகிய 4 மெட்ரோஇரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இட வசதி இல்லாத காரணத்தினால் மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ இரயில்களில் பயணிக்காமல் வாகன நிறுத்தும் வசதியை மட்டும் பயன்படுத்துபவர்களின் தேவை அதிகரித்துள்ளதால், திருவொற்றியூர், திருவொற்றியூர் தேரடி, காலடிப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, நந்தனம், கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், விமான நிலையம், அசோக் நகர், திருமங்கலம், மற்றும் எழும்பூர் மெட்ரோ என 18 மெட்ரோ இரயில் நிலையங்களில் மெட்ரோ பயணிகள் அல்லாதவர்களின் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 30 நாட்களில் மெட்ரோ இரயிலில் பயணம் செய்யாதவர்கள் அல்லது 15-க்கும் குறைவானபயணம் செய்தவர்களுக்கு அரும்பாக்கம் மெட்ரோ மற்றும் பரங்கி மலை மெட்ரோ இரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள மற்ற மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் கட்டணத்தில் எவ்வித மாற்றம்இல்லை.

மேலும் விவரங்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும் https://Chennaimetrorail.org/parking-tariff/

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!